சென்னை: இன்று டிசம்பர் 12 ரஜினிகாந்தின் 68 வது பிறந்தநாளை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள். அவரது ரசிகர்கள் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வந்தனர். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் படக்குழுவினர் சார்பாக பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் '' பேட்ட'' திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. 1.33 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டீசரில் ரசிகர்கள் ஒவ்வெருக்கொள்ளும் 90 களில் பார்த்த ரஜினியை வெளிக்காட்டும் வகையில் உள்ளது. இதில் இரு கெட்டப்பில் ரஜினி வலம் வருகிறார். ஒரு கெட்டப் தாதா போன்றும் இன்னொரு கெட்டப் ஊருக்கு சேவை செய்யும் ஒரு பொதுநலவாதி போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. டீசர் வெளியானது முதல் இதுவரை 45 லட்சம் பேர் இதை யூடியூப் மூலம் பார்த்துள்ளனர். மேலும் இப்படத்தின் இசை டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட்டு ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் தீவிர ரசிகரானதால் படத்தின் காட்சிகள் ரசிகர்களின் மனம் திருப்தி அடையும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஜினி அரசியல் பிரவேசம் எடுக்க போகும் நிலையில், இப்படம் அதற்கான அச்சாணியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Wednesday, December 12, 2018
வெளியானது பேட்ட படம் டீசர்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment